அசின் வீட்டை பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

அசின் வீட்டை பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

அசின் வீட்டை பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

02 Jan, 2015 | 4:52 pm

நடிகை அசினுக்கு கேரளாவின் கொச்சி – ரவிபுரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது.

இந்த வீட்டிற்கான உள் அலங்காரப் பணிகளை அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டது.

ஆனால், பணிகளை முழுமையாக முடித்துக் கொடுக்காததால் அதற்கான ஊதியமான ரூ. 10 இலட்சத்தை அந்நிறுவனத்திற்கு அசின் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அசினுக்கு சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வரும் 14 ஆம் திகதிக்குள் ரூ.10 இலட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்