வென்னப்புவயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலை

வென்னப்புவயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலை

எழுத்தாளர் Bella Dalima

01 Jan, 2015 | 4:20 pm

வென்னப்புவ – லுணுவில பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

கொலை செய்யப்பட்டு கை கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் குழி ஒன்றிலிருந்து இவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கொலை செய்யப்பட்ட பெண் லுணுவில வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர் என தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்