நீங்கள் மேற்கொண்ட தவறுகள் உங்கள் பின்னால் வருவதை மனசாட்சியுடன் ஏற்றுக்கொள்ளுங்கள் – மைத்திரிபால

நீங்கள் மேற்கொண்ட தவறுகள் உங்கள் பின்னால் வருவதை மனசாட்சியுடன் ஏற்றுக்கொள்ளுங்கள் – மைத்திரிபால

நீங்கள் மேற்கொண்ட தவறுகள் உங்கள் பின்னால் வருவதை மனசாட்சியுடன் ஏற்றுக்கொள்ளுங்கள் – மைத்திரிபால

எழுத்தாளர் Bella Dalima

01 Jan, 2015 | 2:20 pm

பொது எதிரணி ஏற்பாடு செய்த பொதுக்கூட்டமொன்று குளியாப்பிட்டியவில் நேற்று (31) நடைபெற்றது.

ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மகா சங்கத்தினர் உள்ளிட்ட கலைஞர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சிலர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினார்கள்.

[quote]மிகவும் வேகமாகவும் காரசாரமாகவும் ஜனாதிபதி மேடைகளில் பேசுகின்றார். வானொலியில் அதனை நான் கேட்டேன். மிகவும் கோபத்துடன் பேசுகின்றார். மக்களின் மனங்களைப் புரிந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஸவிடம் நான் கூறுகின்றேன். யாரையும் வெறுக்க வேண்டாம். எவருடனும் குரோதமாக இருக்க வேண்டாம். மக்களின் கண்களை அன்புடன் பாருங்கள். நீங்கள் மேற்கொண்ட தவறுகள் உங்கள் பின்னால் வருவதை மனசாட்சியுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். தற்போது எழுந்துள்ள மக்கள் சக்திக்கு நீங்கள் தலைசாய்க்க வேண்டும். வன்முறையால் வெற்றிபெற முடியாது. எப்படியாவது வெல்வதாக அவர் கூறுகின்றார். எதனையாவது செய்து வெல்வதாகக் கூறுகின்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் அவரின் குழுவினருக்கும் ஏதேனும் ஒன்றை மேற்கொண்டு வெற்றியீட்டுவதற்கு இடமளிக்கப்போவதில்லை. போலி வாக்குகளைப் போடுவதற்கு இடமளிக்கப்போவதில்லை. இவை அனைத்தையும் நாம் பார்த்துக்கொள்வோம். [/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்