நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த குமார் குணரத்னம் நாடு திரும்பியுள்ளார்

நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த குமார் குணரத்னம் நாடு திரும்பியுள்ளார்

நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த குமார் குணரத்னம் நாடு திரும்பியுள்ளார்

எழுத்தாளர் Bella Dalima

01 Jan, 2015 | 2:01 pm

நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியற்குழு உறுப்பினர் குமார் குணரத்னம் மீண்டும் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று (01) அதிகாலை அவர் நாடு திரும்பியதாகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் துமிந்த நாகமுவ குறிப்பிட்டார்.

குமார் குணரத்னம் இதற்கு முன்னர் நாடு திரும்பியிருந்த சந்தர்ப்பத்தில், குடிவரவு – குடியகல்வு சட்டங்களை மீறியமைக்காக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்