நடைபாதை வியாபாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது – ஹர்ஷ டி சில்வா

நடைபாதை வியாபாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது – ஹர்ஷ டி சில்வா

நடைபாதை வியாபாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது – ஹர்ஷ டி சில்வா

எழுத்தாளர் Bella Dalima

01 Jan, 2015 | 1:56 pm

கொழும்பு நகரை அலங்கரிக்கும் திட்டத்திற்காக அகற்றப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு நிரந்தர இடமொன்றைப் பெற்றுக்கொடுப்பதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

சுயதொழிலாளர்கள் சங்க உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனைக் கூறினார்.

[quote]நடைபாதையில் சிறியளவிலான வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை நாம் அவதானித்துள்ளோம். கொழும்பு நகரை அலங்கரிப்பதற்காக அவர்கள் இந்த பகுதிகளில் இருந்து அகற்றப்பட்டனர். 2 000  பேரளவில் நடைபாதையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுகின்ற போதிலும், அவர்களை அகற்றி நிரந்தர இடமொன்றை அமைத்துக்கொடுத்த போதிலும், 334 பேருக்கு மாத்திரமே வியாபாரத்தை முன்னெடுப்பதற்கான இடங்கள் கிடைத்துள்ளன. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடாதவர்களுக்கே எஞ்சிய இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. [/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்