தேர்தலை இலக்காகக் கொண்டு பொருட்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை அதிகரிப்பு

தேர்தலை இலக்காகக் கொண்டு பொருட்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை அதிகரிப்பு

தேர்தலை இலக்காகக் கொண்டு பொருட்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

01 Jan, 2015 | 1:48 pm

ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டு, பொருட்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை அதிகரித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

இதனைத்தவிர, தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 700 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

அனுராதபுரம், கேகாலை, குருநாகல், புத்தளம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் பதிவானதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கடந்த 08 தினங்களில் நாடெங்கிலும் அதிகளவிலான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கெபே அமைப்பு தெரிவித்தது.

இதேவேளை, தேர்தல் வன்முறைகள் தொடர்பில் தமக்கு 585 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கூறினார்.

இவற்றில் சட்டவிரோத பிரசார நடவடிக்கைகள், தாக்குதல் சம்பவங்கள், அரசியற்கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டமை மற்றும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டமை தொடர்பிலான முறைப்பாடுகள் காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்