ஆளுங்கட்சியின் 17 பிரதேச சபை உறுப்பினர்கள் மைத்திரிபாலவிற்கு ஆதரவு

ஆளுங்கட்சியின் 17 பிரதேச சபை உறுப்பினர்கள் மைத்திரிபாலவிற்கு ஆதரவு

ஆளுங்கட்சியின் 17 பிரதேச சபை உறுப்பினர்கள் மைத்திரிபாலவிற்கு ஆதரவு

எழுத்தாளர் Bella Dalima

01 Jan, 2015 | 2:12 pm

பொலன்னறுவை தமன்கடுவ பிரதேச சபைத் தலைவர் பிரேமசிறி முனசிங்க, ஹிங்குரங்கொட பிரதேச சபைத் தலைவர் சுசந்த ஞானரத்ன உட்பட ஆளுங்கட்சியின் 17 உறுப்பினர்கள் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

பொலன்னறுவையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அவர்கள் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளனர்.

திம்புலாகல பிரதேச சபையின் உப தலைவர் ஆர். புஷ்பகுமார, லங்காபுர பிரதேச சபையின் உப தலைவர் பந்துல சமன் ஆகியோரும் இவர்களில் அடங்குகின்றனர்.

ஏனைய 13 பேரும் ஹிங்குரங்கொட, லங்காபுர, தமன்கடுவ, வெலிகந்த, திம்புலாகல ஆகிய பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்