மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

30 Dec, 2014 | 12:35 pm

புதிய ஜனநாயக முன்னணியின், ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்த புதிய தலைமுறை சங்கத்தின் கலைஞர்கள் மீது குருநாகலில் தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்களில் மாகாண சபை உறுப்பினர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய காணொளி உள்ளிட்ட சில சாட்சியங்கள் கிடைத்துள்ளதாகவும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, மைத்திரிபால சிறிசேனவின் இங்கினியாகவில் அமைந்துள்ள பிரசார அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி, தப்பிச்சென்றிருந்த 08 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தப்பிச்செல்வதற்கு பயன்படுத்திய வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்மார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்