தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 80 பேர் கைது

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 80 பேர் கைது

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 80 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

30 Dec, 2014 | 12:39 pm

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 80 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 12 பேரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

தேர்தல் சட்டங்களை மீறும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராது, கட்சி சார்பின்றி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

எதிர்வரும் 05 ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவடையவுள்ளதால், அதுவரை சட்டத்தை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்த ஒருவார காலப்பகுதியில் அமைதியை பேணுவதற்கும், நியாயமான தேர்தலை நடத்துவதற்கும் பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்