தமிழ் மக்களின் 30 முதல் 35 வீதமான வாக்குகள் கிடைக்கும் என நம்பிக்கை வௌியிட்டுள்ளார் ஜனாதிபதி

தமிழ் மக்களின் 30 முதல் 35 வீதமான வாக்குகள் கிடைக்கும் என நம்பிக்கை வௌியிட்டுள்ளார் ஜனாதிபதி

தமிழ் மக்களின் 30 முதல் 35 வீதமான வாக்குகள் கிடைக்கும் என நம்பிக்கை வௌியிட்டுள்ளார் ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

30 Dec, 2014 | 7:54 pm

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வடக்கிலுள்ள தமிழ் மக்களின் 30 முதல் 35 வீதமான வாக்குகள் தமக்குக் கிடைக்கும் என தான் நம்புவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய தொலைக்காட்சியான தந்தி தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற விசேட நேர்காணலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி : தேர்தல் காலப் பகுதியொன்றே தற்போது இலங்கையில் உள்ளது. உங்களின் அதிகாரத்திற்குக் கீழ் இருந்த அமைச்சர் ஒருவரே தேர்தலில் எதிராகப் போட்டியிடுகின்றார். மீண்டும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது குறித்து உங்களிடம் எவ்வாறான நம்பிக்கையொன்று உள்ளது ?

ஜனாதிபதி :  எனக்கு மிகுந்த நம்பிக்​கையுள்ளது. அவ்வாறு இல்லையென்றால் நாங்கள் இவ்வாறான தேர்தல் ஒன்றை நடாத்தியிருக்க மாட்டோம். எனக்கும் இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்றன. மேலும் இரண்டு வருடங்கள் ஆட்சி செய்திருக்க முடியும். எனினும், அந்த இரண்டு வருடங்களையும் தேர்தலுக்காக நான் தியாகம் செய்துள்ளேன்.

கேள்வி:  எதிர்க்கட்சிக்கு சந்திரிக்காவின் ஆதரவு கிடைக்கின்றது. அவர் ஜனாதிபதியாக இருந்த ஒருவர். அது உங்களுக்கு கவலையளிக்கின்றதா?

ஜனாதிபதி : இல்லவே இல்லை. உண்மையிலேயே நான் அவருடன் மோதுகின்றேன். அவரே முன்னின்று செயற்படுகின்றார். எதிர்க்கட்சித் தலைவர் அல்ல. அவரே அனைத்து கேள்விகளுக்கும் பதில் வழங்குகின்றார். அவர் இலகுவான வேட்பாளர்.

கேள்வி :  உங்களது கட்சி ஸ்தாபகரின் புதல்வி அல்லவா?

ஜனாதிபதி :  ஆம். சரியாகக் கூறினீர்கள்.

கேள்வி :  அது குறித்து நீங்கள் கவலை அடைகின்றீர்களா?

ஜனாதிபதி : இல்லை. இல்லவே இல்லை.

கேள்வி : வடக்கிலுள்ள தமிழர்களிடம் எவ்வாறு ஆதரவை பெற்றுக்கொள்வீர்கள்? கடந்த தேர்தலின் போது உங்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை அல்லவா?

ஜனாதிபதி : அவர்கள் அதனை ஏற்றுக்கொள்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கல்வி கற்றவர்கள். இளைஞர்கள் எந்நேரமும் எதிர்காலம் குறித்தே சிந்திப்பார்கள். அவர்கள் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும். அதனால் கடந்த முறையை விடவும் இம்முறை எனக்கு பெரும் எண்ணிக்​கையிலான வாக்குகள் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளது. கடந்த முறை 18 முதல் 20வீதம் வரையான வாக்குகளே கிடைத்தன. இம்முறை 30 முதல் 35 வரையான வாக்குகள் கிடைக்கும்.

கேள்வி :  வௌிநாட்டு கொள்கைகள் குறித்து அவதானம் செலுத்துகின்ற போது, உங்களது அரசாங்கம் இந்தியாவை விடவும், சீனாவைக் கேந்திரமாகக் கொண்டுள்ளது என்ற எண்ணக்கருவொன்று உள்ளது. நீங்கள் புதுடில்லியை விடவும் பீஜிங்குடன் உறவு அதிகமாகக் கொண்டுள்ளீர்களா?

ஜனாதிபதி :  இல்லை…. இந்தியா என்பது எனது உறவினர். சீனா எனது நண்பர். எனது உறவினருக்கும், நண்பருக்கும் எதிராக எனது பூமியை பயன்படுத்த நான் இடமளிக்க மாட்டேன். இலங்கைக்குள் அது இடம்பெறவும் மாட்டாது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்