தபால்மூலம் வாக்களிக்க இன்றும் சந்தர்ப்பம்

தபால்மூலம் வாக்களிக்க இன்றும் சந்தர்ப்பம்

தபால்மூலம் வாக்களிக்க இன்றும் சந்தர்ப்பம்

எழுத்தாளர் Staff Writer

30 Dec, 2014 | 6:50 am

ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை தபால்மூலம் வாக்களிக்க முடியாமற்போனவர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் இன்று வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பு கடந்த 22, 23 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

இந்த மூன்று தினங்களிலும் வாக்கினை பதிவுசெய்யாத தபால்மூல வாக்காளர்கள் இன்று வாக்களிக்க முடியுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாஸ குறிப்பிட்டார்.

தபால் மூல வாக்களிப்பு இன்று காலை 8.30 முதல், மாலை 4.30 வரை மாவட்ட செயலகங்களில் நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்