ஜனாதிபதி தேர்தல் அமைதியாகவும் நம்பிக்கையானதுமாக நடைபெறுவதை உறுதிப்படுத்தவும்

ஜனாதிபதி தேர்தல் அமைதியாகவும் நம்பிக்கையானதுமாக நடைபெறுவதை உறுதிப்படுத்தவும்

ஜனாதிபதி தேர்தல் அமைதியாகவும் நம்பிக்கையானதுமாக நடைபெறுவதை உறுதிப்படுத்தவும்

எழுத்தாளர் Staff Writer

30 Dec, 2014 | 9:06 am

ஜனாதிபதி தேர்தல் அமைதியாகவும் நம்பிக்கையானதுமாக நடைபெறுவதை உறுதிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.நா செயலாளர் நாயகம் இந்த விடயம் தொடர்பில் கடந்த வாரம், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளதாக ஐ.நா ஊடக மையம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், அரசியல் ஸ்திரதன்மை மற்றும் பொறுப்பு கூறல் நடவடிக்கைகளுக்கு ஐ.நா சபை தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதாக பான் கீ மூன் இதன்போது மீண்டும் உறுதி வழங்கியதாக ஐ.நா சபை தெரிவிக்கின்றது.

தேர்தல் நடவடிக்கைகளில் சிறுபான்மையினரை இணைத்துக்கொள்ளல், அனைத்து வாக்காளர்களும் அச்சமின்றி வாக்களித்தல் என்பன மிகவும் முக்கியமானது என இந்த கலந்துரையாடலில் பான் கீ மூன் குறிப்பிட்டதாக ஐ.நா சபை மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்