ஜனாதிபதி தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் நீடிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் நீடிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Dec, 2014 | 6:58 am

ஜனாதிபதி தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் அடுத்தமாதம் மூன்றாம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையை கருத்திற்கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ அமரதாஸ தெரிவித்தார்.

இதற்கமைய, அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை அற்ற அனைவரும், வாக்களிப்பதற்கு தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்வது கட்டாயமானது என அவர் கூறினார்.

வாக்காளர் பெயர்ப்பட்டியலுக்கு அமைய, சுமார் 09 இலட்சம் பேரிடம் அடையாள அட்டை இல்லையென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ அமரதாஸ மேலும் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்