சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு; நோயாளர்கள் சிகிச்சைகளைப் பெறுவதில் சிக்கல்

சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு; நோயாளர்கள் சிகிச்சைகளைப் பெறுவதில் சிக்கல்

சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு; நோயாளர்கள் சிகிச்சைகளைப் பெறுவதில் சிக்கல்

எழுத்தாளர் Staff Writer

30 Dec, 2014 | 12:49 pm

சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால், நாட்டிலுள்ள பெரும்பாலான வைத்தியசாலைகளில் சிகிச்சைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பணிப்பகிஷ்கரிப்பினால் வெளி நோயாளர் பிரிவுகளில் சிகிச்சைகளையும்,  மருந்தகங்களில் மருந்து வில்லைகளை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி போதனா வைத்தியசாலை உள்ளிட்ட வைத்தியசாலைகள் பலவற்றில் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள நோயாளர்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாதி உத்தியோகத்தர்கள், தகுதிகாண் வைத்தியர்கள் உள்ளிட்ட 14 பிரிவினர் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்து உள்ளிட்ட சில கொடுப்பனவுகள் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு வழங்குமாறு கோரி, இந்த பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்