சீரற்ற காலநிலையால் 34 பேர் உயிரிழப்பு

சீரற்ற காலநிலையால் 34 பேர் உயிரிழப்பு

சீரற்ற காலநிலையால் 34 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Dec, 2014 | 12:52 pm

நாட்டில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளையும் பாதித்த வெள்ளம் தற்போது வடிந்தோடி வருவதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

சீரற்ற வானிலையால், 21 ஆயிரத்து 385 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து, 17 ஆயிரத்து 500ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இடைக்கிடை பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் மழை பெய்யக்கூடுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்