சீரற்ற காலநிலை‍க்கு கண்டியில் ஒருவர் பலி

சீரற்ற காலநிலை‍க்கு கண்டியில் ஒருவர் பலி

சீரற்ற காலநிலை‍க்கு கண்டியில் ஒருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

30 Dec, 2014 | 6:44 am

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

மாத்தளை, கண்டி, பதுளை, நுவரெலியா, கேகாலை, குருணாகல், களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலேயே, மண்சரிவு அபாயம் காணப்படுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மழையுடனான காலநிலையினால், கண்டியில் இரண்டு அனர்த்தங்கள் பதிவாகியுள்ளதுடன்ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி பேராதனை வீதியிலுள்ள சந்தை தொகுதியின் வாகன தரிப்பிடத்தின் மீது மரம் முறிந்து வீழ்ந்துள்ளது. அங்கு காணப்பட்ட 15 வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த இருவரும் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி பொலிஸார், தீயணைப்பு பிரிவினர் மற்றும் படையினர் இநை்து வீதியிலிருந்து மரத்தை அகற்றுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்