சல்மான் கானுக்கு ஆலோசனை வழங்குகின்றார் அனுரகுமார

சல்மான் கானுக்கு ஆலோசனை வழங்குகின்றார் அனுரகுமார

எழுத்தாளர் Bella Dalima

30 Dec, 2014 | 8:28 pm

பதுளை – வெல்கடே பிரதேசத்தில் நேற்று (29) பிற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டமொன்று நடைபெற்றது.

இதன்போது அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்ததாவது;

[quote]இந்தியாவின் சல்மான் கானுக்கு நான் ஒரு ஆலோசனையை வழங்குகின்றேன். சல்மான் கானுக்கு துணை நடிகராகவே நடிக்க ​வேண்டி ஏற்படுகிறது. கதாநாயகன் இலங்கையின் மஹிந்த ராஜபக்ஸவே. இதுவென்ன செயற்பாடு. இது குறித்து நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். நாட்டு மக்கள் புத்தியுடன் சிந்திப்பர். இந்த நாட்டு மக்களின் அறிவு மட்டம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஸ எந்தளவு மதிப்பிட்டுள்ளார். சல்மான் கான் மேடையில் ஏறி கை அசைப்பதனால் வாக்கு கிடைக்கும் என்று நினைக்க வேண்டாம். இந்த தேர்தல் பிரசாரத்தின் போது மஹிந்த ராஜபக்ஸ செயற்படும் விதத்தைப் பாருங்கள்.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்