சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு

சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு

சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு

எழுத்தாளர் Bella Dalima

30 Dec, 2014 | 3:46 pm

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளார்.
33 வயதான தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பின் தோனி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் தோனியின் செயற்பாடு திருப்திகரமாக இல்லையென,  அவரது தலைமைத்துவம் மீது சமீபகாலமாக  கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக ஓய்வு பெற்றுள்ளதாக  தோனி தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்