குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர்  திஸ்ஸ அத்தநாயக்கவிடம் விசாரணை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் விசாரணை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் விசாரணை

எழுத்தாளர் Bella Dalima

30 Dec, 2014 | 10:36 pm

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர், அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் இன்று (30) விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அவரது வீட்டிற்கு சென்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படும் உடன்படிக்கை தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு எதிர்கட்சித் தலைவர் பொலிஸ் மாஅதிபரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கமைய மைத்ரிபால சிறிசேனவிடமும், ரணில் விக்ரமசிங்கவிடமும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணை நடத்தியதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்