கும்புக்கெட்டே தாக்குதல்: நீலப்படையணி மீதான குற்றச்சாட்டை நிராகரிக்கிறார் அழகப்பெரும

கும்புக்கெட்டே தாக்குதல்: நீலப்படையணி மீதான குற்றச்சாட்டை நிராகரிக்கிறார் அழகப்பெரும

எழுத்தாளர் Bella Dalima

30 Dec, 2014 | 8:37 pm

கும்புக்கெட்டே பிரதேசத்தில் கலைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீலப்படையணி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நிராகரிப்பதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (30)  நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இது குறித்து கருத்துத் தெரிவித்தார்.

[quote]கலைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கண்டிக்கின்றது. நீலப்படையினர் தாக்குல் மேற்கொண்டதாகக் கூறுவது நியாயமற்றது. நீலப்படையணி என்பது ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பாகும். அதன் ரீ.சேட்டை அணிந்திருந்தமையினால் அந்த அமைப்பின் மீது குற்றம் சுமத்த முடியாது. அத்துடன் சல்மான் கான் தேர்தல் பிரசாரங்களுக்காக வரவில்லை. சுகாதார சிகிச்சை முகாம் ஒன்றுக்கே வந்துள்ளதாக அவரே கூறியுள்ளார். அத்துடன் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏதாவது ஒரு முறையில் உதவி புரிய எதிர்பார்த்துள்ளதாகவும் சல்மான் கான் கூறியுள்ளார். அத்துடன் தான் சொந்த செலவில் வந்துள்ளதாகவும் சல்மான் கான் தௌிவாகக் கூறியுள்ளார்[/quote]

என்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்