எயார் ஏசியா பயணிகளுடையது என நம்பப்படுகின்ற 40 சடலங்கள் கண்டுபிடிப்பு

எயார் ஏசியா பயணிகளுடையது என நம்பப்படுகின்ற 40 சடலங்கள் கண்டுபிடிப்பு

எயார் ஏசியா பயணிகளுடையது என நம்பப்படுகின்ற 40 சடலங்கள் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Dec, 2014 | 3:30 pm

காணாமற்போன எயார் ஏசியா விமானத்தில் பயணித்தவர்களுடையது என நம்பப்படுகின்ற 40 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விமானத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இந்தோனேசிய மீட்புப் படையினர், விமானத்தின் பாகங்களைக் கடலில் கண்டதாகவும் அதனருகில் சடலங்களைக் கண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் பாகங்கள் காணாமற்போன எயார் ஏசியா விமானத்தினுடையதுதான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் சுரபயாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட எயார்பஸ் ஏ 320-200 ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காணமற்போனது.

இந்த விமானத்தைத் தேடும் பணிகள் மூன்றாவது நாளாக நடந்துவருகின்றன.

கடலிலும் நிலத்திலும் 13 பகுதிகளை உள்ளடக்கிய வகையில் தேடுதல் பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்