இரகசிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவில்லை – மைத்திரிபால சிறிசேன

இரகசிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவில்லை – மைத்திரிபால சிறிசேன

எழுத்தாளர் Bella Dalima

30 Dec, 2014 | 6:35 pm

எந்தவொரு அரசியல் கட்சி மற்றும் அமைப்புக்களோடும் இரகசிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவில்லையென புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று (29) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இதனைக் கூறினார்.

அநுராதபுரம் நகரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொது எதிரணியின் பல உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாவது ;

[quote]நாம் எந்தவொரு அரசியல் கட்சிகளுடனும், அமைப்புக்களுடன் உடன்படிக்கை செய்து கொள்ளவில்லை. இரகசிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவில்லை. நாம் அனைவரும் மிகவும் புரிந்துணர்வுடன் செயற்படுகின்றோம். இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக மக்கள் ஒன்றிணைந்துள்ளனர். இன்று அரசாங்கம் தனிமையடைந்துள்ளது. ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, நவசமசமாஜ கட்சி, வாசுதேவ நாணயக்காரவின் மக்கள் ஐக்கிய முன்னணி போன்ற அனைத்து கட்சிகளும் பிளவுபட்டு ஒரு பகுதியினர் பிரிந்து சென்றுள்ளனர். அவர்கள் இன்று எம்முடன் உள்ளனர். எனவே, தாம் வாக்களிப்பது இந்த நாட்டை பாதுகாப்பதற்காகவா அல்லது ராஜபக்ஸ குடும்பத்தை பாதுகாப்பதற்காகவா, என்பதனை உள்ளத்தில் கையை வைத்துக் கேளுங்கள்.[/quote]

என்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்