அரச உத்தியோகத்தர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் சம்பவங்கள் மேலும் அதிகரிப்பு

அரச உத்தியோகத்தர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் சம்பவங்கள் மேலும் அதிகரிப்பு

அரச உத்தியோகத்தர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் சம்பவங்கள் மேலும் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Dec, 2014 | 6:53 am

அரச உத்தியோகத்தர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் சம்பவங்கள், தொடர்பில் இதுவரை 148 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டது.

இதனைத்தவிர, அரச உத்தியோகத்தர்களுக்கான இடமாற்றம் மற்றும் பதவியுயர்வு தொடர்பில் 60 முறைப்பாடுகள் தேர்தல்கள் செயலகத்திற்கு பதிவாகியுள்ளன.

தேர்தலுடன் தொடர்புடைய 752 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் பிரிவு தெரிவித்தது.

இவற்றில் 78 முறைப்பாடுகள் பாரிய சம்பவங்கள் தொடர்பானவை என தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்