”அமோக வெற்றி பெறுவதற்கு பிரார்த்திக்கிறேன்”; பஷீர் சேகுதாவுத் ஜனாதிபதிக்கு கடிதம்

”அமோக வெற்றி பெறுவதற்கு பிரார்த்திக்கிறேன்”; பஷீர் சேகுதாவுத் ஜனாதிபதிக்கு கடிதம்

”அமோக வெற்றி பெறுவதற்கு பிரார்த்திக்கிறேன்”; பஷீர் சேகுதாவுத் ஜனாதிபதிக்கு கடிதம்

எழுத்தாளர் Staff Writer

30 Dec, 2014 | 8:58 am

dஉற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பதவிலிருந்து இராஜினாமா செய்தமைக்கான காரணங்களை தெளிவுபடுத்தி, பஷீர் சேகுதாவூத் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் ஏற்பட்ட அதிருப்தி மற்றும் நம்பிக்கையின்மை காரணமாக தாம் இராஜினாமா செய்யவில்லை என பஷீர் சேகுதாவூத் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுப்பற்றுள்ள பிரஜையான ஜனாதிபதி, நாட்டிலுள்ள அனைத்து மக்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு சிறந்த சேவையாற்றி உள்ளமையை மறக்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.

பஷீர் சேகுதாவூத் தாம் பதவி விலகுவதற்கான காரணங்கள் சிலவற்றை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதுடன், அதில் முதல் காரணமாக, தமது அரசியல் கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த தீர்மானத்திற்கு இணங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் மக்களிடையே தமது கட்சி துரோகம் இழைப்பதாக ஏற்பட்டுள்ள நிலைப்பாட்டை இல்லாமல் செய்வதற்கும், அதிகார பேராசையுடைய ஒருவர் என தெரிவிப்பதை மறுப்பதும் இரண்டாவது காரணம் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் தாம் எந்தவொரு தேர்தல் பிரசார நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், இந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்களின் விசேடமாக முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதியிடம் நம்பிக்கை  கொண்டுள்ளதாக தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அமோக வெற்றி பெறுவதற்கு பிரார்த்திப்பதாக பஷீர் சேகுதாவூத் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்