162 பேருடன் காணாமல் போன விமானத்தை தேடும் பணி தொடர்கிறது; கடலில் வீழந்திருக்கலாம் என்கிறது இந்தோனேஷியா

162 பேருடன் காணாமல் போன விமானத்தை தேடும் பணி தொடர்கிறது; கடலில் வீழந்திருக்கலாம் என்கிறது இந்தோனேஷியா

162 பேருடன் காணாமல் போன விமானத்தை தேடும் பணி தொடர்கிறது; கடலில் வீழந்திருக்கலாம் என்கிறது இந்தோனேஷியா

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2014 | 3:55 pm

காணாமல் போன எயார் ஏஷியா பயணிகள் விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்த குறித்த விமானம் 162 பேருடன் ஜாவா கடற்பகுதியில் காணாமல் போயிருந்தது.

காணாமல் போன விமானத்தை தேடும் பெரும்பாலான பணிகள் இரவு இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அந்தப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனினும் குறித்த விமானத்தை தேடும் பணிகளை சில கப்பல்கள் தொடர்ந்தும் முன்னெடுத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, விமானம் கடலுக்குள் வீழ்ந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக இந்தோனேஷியா தெரிவித்துள்ளது.

எனினும் இதற்கான ஆதாரமாக விமானத்தின் பாகங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்களுக்கான இந்தோனேஷித் தலைவர் கூறியுள்ளார்.

எந்தப் பகுதியில் விமானம் விபத்திற்கு உள்ளாகியிருக்கும் என்பது தொடர்பான மதீப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த விமானத்தைத் தேடும் பணிகளுக்காக 12 கப்பல்களையும் மூன்று ஹெலிகொப்டர்களையும் ஐந்து இராணுவ விமானங்களையும்  இந்தோனேஷியா வழங்கியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்