ரணிலின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைப்பு வழங்க ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தயாரில்லை – நிமல் சிறிபால டி சில்வா

ரணிலின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைப்பு வழங்க ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தயாரில்லை – நிமல் சிறிபால டி சில்வா

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2014 | 8:31 pm

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேசிய அரசாங்கமொன்றின் பங்குதாரராக தயாரில்லை என அந்தக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

[quote]ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவரும் தற்போது சென்று விட்டனர். இருப்பவர்கள் யாரும் அவருக்கு இனி ஆதரவு வழங்க மாட்டார்கள். நாங்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கே ஆதரவு வழங்குவோம். சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைப்பு வழங்க ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஒருபோதும் தயார் இல்லை என்பதை மிகவும் தெளிவாக கூறிக் கொள்கின்றேன். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஒருபோதும் எதிர் கட்சியை அழித்து விட்டு தேசிய அரசாங்கத்திற்கு சென்ற கட்சியல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசாங்கத்தை அமைப்பதாக ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார். நாங்கள் எமது அரசாங்கத்தை ஸ்தாபிப்போமே தவிர எந்தவொரு தேசிய அரசாங்கத்திலும் பங்குதாரர்களாகும் கொள்கை எமக்கு கிடையாது என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் என்ற வகையில் கூறுகின்றேன்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்