மைத்திரிபால சிறிசேனவின் அலுவலகம் மீதான தாக்குதல் சம்பவம்; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

மைத்திரிபால சிறிசேனவின் அலுவலகம் மீதான தாக்குதல் சம்பவம்; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

மைத்திரிபால சிறிசேனவின் அலுவலகம் மீதான தாக்குதல் சம்பவம்; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2014 | 5:33 pm

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் மஹியங்கனையிலுள்ள அரசியல் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் கைதான 04 சந்தேகநபர்களும் அடுத்த மாதம் 06 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாகனங்களில் வருகைதந்த குழுவினர், நேற்றிரவு 10 மணியளவில் குறித்த அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

இந்தத் தாக்குதலில் அலுவலகத்தில் இருந்த ஐவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தாக்குதலில் குறித்த அலுவலகத்திற்கும், அங்கிருந்த வாகனங்கள் சிலவற்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்