மைத்திரிபாலவின் ஆதரவாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணை

மைத்திரிபாலவின் ஆதரவாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணை

மைத்திரிபாலவின் ஆதரவாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2014 | 7:30 pm

குருநாகல், கும்புக்கெடே பிரதேசத்தில் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்து கலைஞர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தை நேரிற்கண்டவர்களிடம் வாக்குமூலம் பதிவுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலில் தமது உறுப்பினர்கள் சிலர் காயமடைந்ததாக புதிய தலைமுறை கலைஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்