மாற்றம் அழிவுக்கு வித்திடக்கூடாது என்கிறார் ஜனாதிபதி

மாற்றம் அழிவுக்கு வித்திடக்கூடாது என்கிறார் ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2014 | 9:16 pm

மாற்றமொன்றை நோக்கிப் பயணிப்பதாயின், அது ஒரு சிறந்த மாற்றமாக அமைய வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களை கொழும்பில் சந்தித்தபோதே, ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

இத்தாலி, இங்கிலாந்து, ஜேர்மனி, சுவிட்ஸர்லாந்து, நெதர்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

[quote]கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதன் பின்னர் இங்கு வருவதற்கு முன்னர் ஒன்றரை மணித்தியாலங்கள் செல்லும். எனினும் தற்பொழுது 15 அல்லது 20 நிமிடங்களில் வந்துவிடலாம். ஆகவே, இதில் மீண்டும் மாற்றம் ஏற்படுத்துவதாயின், அந்த 15 நிமிடத்தை ஒன்றரை மணித்தியாலங்களாக அதிகரிக்க வேண்டும். அதுவே நான் காணும் மாற்றமாகும். மாற்றமொன்றை ஏற்படுத்தும் போது, அது சிறந்த மாற்றமாக அமையவேண்டும். மாற்றம் அழிவுக்கு வித்திடக்கூடாது. எனவே, நாம் இந்த வேளையில் சிறந்த முறையில் சிந்திக்க வேண்டும். ஐரோப்பாவில் வசிக்கும் உங்களுக்கு இந்த மாற்றங்கள் தொடர்பில் நன்கு தெரியுமென நினைக்கின்றேன். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இதுபோன்ற மாற்றங்கள் நன்கு புலப்படும். எனினும், இலங்கையில் இன்று சிலர் முகப்புத்தகத்தின் ஊடாக மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்து, இதனை மறுபக்கம் திருப்புகின்றனர். இதனையே லிபியாவிலும் செய்தனர்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்