நெடுந்தீவு கடற்பரப்பில் காப்பாற்றப்பட்ட இந்திய மீனவர்கள் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2014 | 7:55 pm

நெடுந்தீவு கடற்பரப்பில் காப்பாற்றப்பட்ட 08 இந்திய மீனவர்களும் யாழ். இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் இன்று மாலை ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், இந்திய மீனவர்கள் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஓரிரு தினங்களில் இந்த மீனவர்கள் இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் படகு பழுதடைந்த நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் கடற்படையினரால் நேற்றைய தினம் காப்பாற்றப்பட்டு, நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்