நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை; 11 இலட்சம் பேர் பாதிப்பு, 30 பேர் பலி

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை; 11 இலட்சம் பேர் பாதிப்பு, 30 பேர் பலி

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை; 11 இலட்சம் பேர் பாதிப்பு, 30 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2014 | 7:43 pm

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால், 11 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.

மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களால் 30 பேர் உயிரிழந்துள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இதேவேளை, மண்சரிவு அபாயம் காரணமாக, மாத்தளை – தொடம்தெனிய பகுதியைச் சேர்ந்த 50 குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளன.

மண்சரிவால் மாத்தளை – வடகொட வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு ஆராய்ச்சிப் பிரிவின் மாத்தளை மாவட்ட பிரதானி குறிப்பிட்டார்.

இரத்தோட்டை மற்றும் உகுவெல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளை அடையாளங் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

இதேவேளை, கண்டி – பன்வில பிரதேச சபைக்குட்பட்ட டியனிலை தோட்டத்தில் வெள்ளம் காரணமாக, 50க்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் பாடசாலையொன்றில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

மேலும், நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் சில தினங்களில் குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்