தபால் மூல வாக்களிப்பிற்கான இறுதி சந்தர்ப்பம் நாளை

தபால் மூல வாக்களிப்பிற்கான இறுதி சந்தர்ப்பம் நாளை

தபால் மூல வாக்களிப்பிற்கான இறுதி சந்தர்ப்பம் நாளை

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2014 | 7:33 am

இதுவரை தபால் மூலம் வாக்களிக்க முடியாமற்போனவர்களுக்கு நாளைய தினம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்பு கடந்த 22 , 23 , 26 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

இந்த மூன்று தினங்களிலும் வாக்கினை பதுவு செய்யாத தபால் மூல வாக்காளர்கள் நாளைய தினம் வாக்களிக்க முடியும் என மேலதிக தேர்தல்கள் ஆனையாளர் யூ.அமரதாச குறிப்பிட்டார். தபால் மூல வாக்களிப்பு நாளை மாவட்ட செயலகங்களில் இடம்பெறவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்