ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை – மஹிந்த தேசப்பரிய

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை – மஹிந்த தேசப்பரிய

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை – மஹிந்த தேசப்பரிய

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2014 | 7:27 am

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பரிய தெரிவிக்கின்றார்.

தேர்தலை ஒத்திவைக்குமாறு எந்தவொரு வேட்பாளரோ அல்லது அவர்களது பிரதிநிதிகளளோ அல்லது அவர்களது சட்டத்தரணிகளோ தம்மிடம் கோரிக்கை விடுக்கவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை,ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் நான்காம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கையை இம்மாதம் 31 ஆம் திகதி நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது

எனினும் நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக விநியோக நடவடிக்கைக்கான காலத்தினை நீடிக்க தீர்மானித்ததாக மேலதிக தேர்தல்கள் ஆனையாளர் யூ. அமரதாச குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்காக வழங்கப்படும் தற்காலி அடையாள அட்டையை எதிர்வரும் மூன்றாம் திகதிவரை விநியோகிக்க தீர்மானிக்கபட்டுள்ளதாக தேர்தல்கள் ஆனையாளர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்