ஜனாதிபதிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் சல்மான் கான் (Video)

ஜனாதிபதிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் சல்மான் கான் (Video)

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2014 | 8:22 pm

இந்தியாவின் பிரபல நடிகர் சல்மான் கான் மற்றும் நடிகை ஜக்லின் பெர்னான்டஸ் ஆகியோர் இன்று இலங்கைக்கு வருகைதந்தனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு  சல்மான் கான் அழைக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் பி.டி.ஐ செய்தி சேவை தெரிவித்துள்ளது.

இலங்கையின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பொலிவுட் நடிகர் ஒருவர் கலந்துகொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இளைஞர்களுக்கான நாளை அமைப்பு மற்றும் திலங்க சுமதிபால மன்றம் என்பன பொரளை கெம்பல் மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமிலும் இவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால கருத்து வெளியிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்