சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2014 | 6:49 am

வௌ்ளம் காரணமாக 16 மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. திருகோணமலை,அம்பாறை,மன்னார்யாழ்ப்பாணம்,  கிளிநொச்சி,முல்லைத்தீவு,வவுனியா, அநுராதபுரம்,பொலன்னறுவை,புத்தளம், குருணாகல், கேகாலை, மட்டக்களப்பு, கண்டி, நுவரெலியா, மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களே சீரற்ற வானிலை காரணமாக அதிகளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

சீரற்ற வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் 9000 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் குறிப்பிட்டார். இதேவேளை வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்வடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வௌ்ளம் காரணமாக பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். இதுவரையில் மூன்று லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மாவட்ட செயலாளர்கள் கோரியுள்ள நிதியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கையில் பத்தாயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்