சக்தி சிரச – ஜோன் கீல்ஸ் நிவாரண யாத்திரை; பொருட்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இன்றும் முன்னெடுப்பு

சக்தி சிரச – ஜோன் கீல்ஸ் நிவாரண யாத்திரை; பொருட்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இன்றும் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2014 | 6:07 pm

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள  சக்தி சிரச – ஜோன் கீல்ஸ் நிவாரண யாத்திரை மூலம் இன்றும் நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத் தலைமையகத்தில் இருந்து நேற்று நிவாரண யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனம், ஜோன் கீல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இம்முறை நிவாரண யாத்திரையை முன்னெடுக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.

சீரற்ற வானிலையால் திருகோணமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஒருசில பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு இன்று முற்பகல் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இதனைத் தவிர அனுராதபுரம் மற்றும் பொன்னறுவை ஆகிய மாவட்டங்களில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சக்தி சிரச – ஜோன் கீல்ஸ் நிவாரண யாத்திரை மூலம் நிவாரணப் பொருட்கள் பகிரிந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்