குருநாகலில் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

குருநாகலில் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2014 | 3:30 pm

குருநாகல், கும்புக்கெடே பிரதேசத்தில் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்து கலைஞர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் தமது உறுப்பினர்கள் சிலர் காயமடைந்துள்ளதாக புதிய தலைமுறை கலைஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்திடம் வினவியபோது, சம்பவம் தொடர்பில் கும்புக்கெடே பொலிஸ் நிலையத்தில் எவ்வித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை என குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்