களனியில் 17 வயது இளைஞர் படுகொலை

களனியில் 17 வயது இளைஞர் படுகொலை

களனியில் 17 வயது இளைஞர் படுகொலை

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2014 | 6:00 pm

களனி, பட்டிய சந்தி பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு, 17 வயதான இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்கு அருகில் இன்று பிற்பகல் குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நீண்டகாலமாக காணப்பட்ட தகராறொன்றை அடிப்படையாக வைத்து, இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

தாக்குதலை நடத்திய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்