கடும் மழையால் பிரதான வீதிகளூடான  போக்குவரத்திற்கு இடையூறு

கடும் மழையால் பிரதான வீதிகளூடான போக்குவரத்திற்கு இடையூறு

கடும் மழையால் பிரதான வீதிகளூடான போக்குவரத்திற்கு இடையூறு

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2014 | 12:01 pm

கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நாட்டின் சில முக்கிய வீதிகளூடான  போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு- மனம்பிட்டிய வீதி, கந்தளாய் சேருவில வீதி, திருகோணமலை- மட்டக்களப்பு வீதியின் வெருகல் பகுதி,  பொலன்னறுவை கல்லேல்லயில் இருந்து மனம்பிட்டிய வரையான வீதி, சுங்காவிலயில் இருந்து மனம்பிட்டிய வரையான வீதி என்பன வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மொனராகலை கதிர்காமம்- செல்லக் கதிர்தாகமம் வீதியும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதனைத் தவிர கண்டி நுவரெலியா பிரதான வீதியின் கெரண்டி எல்ல பகுதியிலும்  மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் அந்த வீதியூடான வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

குறித்த வீதிகளுக்கு பதிலாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு இடர் முகாமைத்துவ நிலையம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்