”எனது கணவரை கொலை செய்ய வேண்டாம்”; சோலங்கராச்சியின் மனைவி கண்ணீருடன் வேண்டுகோள்

”எனது கணவரை கொலை செய்ய வேண்டாம்”; சோலங்கராச்சியின் மனைவி கண்ணீருடன் வேண்டுகோள்

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2014 | 9:04 pm

கொடிகாவத்த – முல்லேரியாவ பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன சோலங்கராச்சியின் பாதுகாப்பு அவதான நிலையில் காணப்படுவதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மேற்கொண்ட தீர்மானத்தின் பின்னரே, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் திவங்கா சோலங்கராச்சி தெரிவித்தார்.

[quote]விஷேட அதிரடி படையினர் நிறைந்துள்ள வாகனம் ஒன்று முதல் நாள் முழுவதும் நாம் இருக்கும் பிரதேசத்தில் காணப்பட்டது.  நேற்று எனது கணவரை தேடி வந்த பொலிஸ் ஜீப் வண்டியே இது. தற்போது நான் கற்பமடைந்த நிலையிலேயே உள்ளேன். காலையில் எழுந்ததன் பின்னர் முதல் கணவருக்கு என்ன நடக்கும் என்ற அச்சத்திலேயே உள்ளேன். 2010ஆம் ஆண்டில் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை செய்யப்பட்டது அனைவருக்கும் தெரியும். 4 பேருடன் வீதியில் கொலை செய்யப்பட்டார். இது எனது கணவருக்கும் இடம்பெறுவதை நான் விரும்பவில்லை. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையினாலேயே இங்கு வந்து கூறுகின்றோம். தற்போதைய அரசாங்கம் ஏன் இவ்வாறு செய்கின்றது என்று தெரியவில்லை். அவரை கொண்டு சென்றுள்ளனர். அவரை கொலை செய்ய வேண்டாம். அவர் ஆயுதங்களை பயன்படுத்துபவர் அல்ல. தவறு என்றால் அதனை நேரடியாகவே கூறிவிடுவார். அரசாங்கம் தவறாக பார்ப்பது ஏன் என தெரியவில்லை. கடந்த 6 நாட்களாக அவரை காணவில்லை. பேசவும் போவதில்லை். இதனால் அவருக்கு பிரச்சினை ஏறற்படலாம். தெமடகொட குற்றத்தடுப்பு பிரிவினர் எவ்விதமான ஆவனமும் இன்றி அழைக்கின்றனர். என்னால் எவ்வாறு நம்பி பொலிஸ் நிலையத்திற்கு செல்ல முடியும்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்