விமானி பயணப் பாதையை மாற்றியதால் விமானம் காணாமல் போனதா?; எயார் ஏஷியா தொடரும் மர்மம்

விமானி பயணப் பாதையை மாற்றியதால் விமானம் காணாமல் போனதா?; எயார் ஏஷியா தொடரும் மர்மம்

விமானி பயணப் பாதையை மாற்றியதால் விமானம் காணாமல் போனதா?; எயார் ஏஷியா தொடரும் மர்மம்

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2014 | 2:40 pm

இந்தோனேஷியாவின் சுரபாயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு பயணித்த எயார் ஏஷியா நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் காணாமல் போயுள்ளது.

எயார் ஏஷியாவின் கியூ இஸட் 8501 விமானம் இன்று காலை முதல்  கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்புகளை இழந்துள்ளதாக  இந்தோனேஷிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தில் சிங்கப்பூர், பிரிட்டன், மலேஷியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 6 சிறுவர்கள், ஒரு குழந்தை உட்பட 155 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் பயணித்துள்ளனர்.

ஏனைய அனைத்து பயணிகளும் இந்தோனேஷிய பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது

சீரற்ற காலநிலையால் பயணப்பாதையை விட்டு விலகி வேறொரு பாதையூடாக பயணிப்பதற்கு விமானி அனுமதி கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்பின்னரே விமானத்தின் தொடர்புகள் அற்றுப்போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேடுதல் பணிகள் இடம்பெற்று வருவாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்