மலேஷியாவில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ மேலதிக நிதி ஒதுக்கீடு

மலேஷியாவில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ மேலதிக நிதி ஒதுக்கீடு

மலேஷியாவில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ மேலதிக நிதி ஒதுக்கீடு

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2014 | 4:25 pm

மலேஷியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மேலதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் நஜிப் ரஸாக் தெரிவித்துள்ளார்.

விடுமுறைக்காக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நாடு திரும்பியவுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு பிராந்தியங்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

வெள்ளப்பெருக்கில் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதுடன் ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்ட்டுள்ளனர்.

முகாம்களிலுள்ள மக்களுக்கான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருவதுடன் மீட்பு பணிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்