பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம 30 வரை விளக்கமறியலில்

பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம 30 வரை விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2014 | 8:22 pm

வெளிநாட்டில் இருந்து நாடுதிரும்பியபோது கைது செய்யப்பட்ட பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிரதி அமைச்சர், நீர்கொழும்பு பிரதம நீதவான் பூர்ணிமா பரணகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

இதனைத் தவிர வழக்கு விசாரணைகளுக்காக பிரதி அமைச்சரை பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீர்கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து இன்று முற்பகல் நாடு திரும்பிய சந்தர்ப்பத்தில் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

வந்துரம்ப பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களை கடத்திச் சென்றமை மற்றும் அந்த நடவடிக்கைக்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவின் சாரதியும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்