நிறுவனங்கள் மூலம் கிடைக்கப்போகும் தொகை குறித்தே தற்போதைய அரசாங்கம் சிந்திக்கிறது – மைத்திரிபால

நிறுவனங்கள் மூலம் கிடைக்கப்போகும் தொகை குறித்தே தற்போதைய அரசாங்கம் சிந்திக்கிறது – மைத்திரிபால

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2014 | 8:16 pm

விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு உண்மையான தேவை இல்லையென புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் பொது எதிரணியின் பல உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அங்கு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன பாரிய நிறுவனங்கள் மூலம் கிடைக்கப்போகும் தொகை குறித்து மாத்திரமே தற்போதைய அரசாங்கம் சிந்திப்பதாக குற்றம் சுமத்தினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்