நிந்தவூருக்கான நீர் விநியோக குழாய் சேதம்; குடிநீர் விநியோகம் முற்றாக நிறுத்தம்

நிந்தவூருக்கான நீர் விநியோக குழாய் சேதம்; குடிநீர் விநியோகம் முற்றாக நிறுத்தம்

நிந்தவூருக்கான நீர் விநியோக குழாய் சேதம்; குடிநீர் விநியோகம் முற்றாக நிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2014 | 4:12 pm

அம்பாறை கொண்டுவட்டுவான் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நிந்தவூருக்கு நீர் விநியோகிக்கப்படுகின்ற பிரதான நீர் குழாய் வெள்ளத்தினால் சேதமடைந்துள்ளது.

இதனால் நிந்தவூர், காரைத்தீவு, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, கல்லாறு ஆகிய பகுதிகளுக்கான குடிநீ்ர் விநியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்தின் பிராந்திய முகாமையாளர் ஹைதர் அலி நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார்

சேதமடைந்துள்ள பிரதான நீர் குழாயை திருத்தப் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சீரான வானிலை நீடிக்கும் பட்சத்தில் நாளை பகல் வேளைக்குள் குறித்த பகுதிகளுக்கான குடிநீர் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர முடியும் என அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்தின் பிராந்திய முகாமையாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்