சீரற்ற வானிலையால் சில வீதிகளூடான போக்குவரத்திற்கு தடை; ரயில் சேவைகளும் இரத்து

சீரற்ற வானிலையால் சில வீதிகளூடான போக்குவரத்திற்கு தடை; ரயில் சேவைகளும் இரத்து

சீரற்ற வானிலையால் சில வீதிகளூடான போக்குவரத்திற்கு தடை; ரயில் சேவைகளும் இரத்து

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2014 | 4:06 pm

சீரற்ற வானிலையால் சில வீதிகளூடான வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

புத்தளம் சிலாபத்துறை ஊடாக மன்னாருக்கு செல்லும் வீதியிலும், சிலாபம்-புத்தளம் வீதியின் சில பகுதிகளிலும் இலகு ரக வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை உள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை – மட்டக்களப்பு வீதியின் வெருகல் பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்த வீதியூடானவும் இலகு ரக வாகனங்களை செலுத்த முடியாத நிலை காணப்படுவதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

சிறியளவிலான மண் சரிவுகள் ஏற்பட்ட போதிலும் மலையக ரயில் மார்க்கத்தில் கண்டியிலிருந்து சில ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கண்டியிலிருந்து நானுஓயா ஹட்டன் மற்றும் நாவலப்பிட்டி ஆகிய ரயில் நிலையங்களுக்கான ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரையான ரயில் சேவை தொடர்ந்தும் பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்புக்கு இன்று இரவு முன்னெடுக்கப்படவிருந்த தபால் ரயில் சேவையும் இரத்து செய்யப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்