சீரற்ற காலநிலையால் 9 இலட்சம் மக்கள் பாதிப்பு; 80,000 மக்கள் இடம்பெயர்வு, 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சீரற்ற காலநிலையால் 9 இலட்சம் மக்கள் பாதிப்பு; 80,000 மக்கள் இடம்பெயர்வு, 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2014 | 1:25 pm

கடும் மழையால் ஒன்பது இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இடம்பெயர்ந்த 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் பொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு கரையோர பகுதியில் நிலைக் கொண்டுள்ள தாழமுக்கத்தினால் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது.

கிளிநொச்சியில் பெய்துவரும் மழையால் இரணைமடு குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறுகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மழை ஓரளவு குறைவடைந்துள்ள போதிலும் அநேகமான வீதிகளூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது, புத்தளம் மாவட்டத்திலும் இன்று மழை ஓரளவு குறைவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.

இதேவேளை, மலையகத்தின் அநேகமான பகுதிகளில் நேற்றிரவு கடும் மழை பெய்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்