சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகளை அகற்றிய பொலிஸாருக்கு அச்சுறுத்தல்

சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகளை அகற்றிய பொலிஸாருக்கு அச்சுறுத்தல்

சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகளை அகற்றிய பொலிஸாருக்கு அச்சுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2014 | 12:59 pm

கொழும்பு கொட்டாஞ்சேனை புளூமெண்டல் பகுதியில் சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு துப்பாக்கிகளுடன் வந்த சிலரால் இன்று அதிகாலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

டிப்பெண்டர் வாகனங்களில் வந்த சிலரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முனனெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்