சக்தி சிரச ஜோன் கீல்ஸ் நிவாரண யாத்திரை; பொருட்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பம் (Photos)

சக்தி சிரச ஜோன் கீல்ஸ் நிவாரண யாத்திரை; பொருட்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பம் (Photos)

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2014 | 6:21 pm

சக்தி சிரச நிவாரண யாத்திரை மூலம் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்களை சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை புத்தளம் மாவட்டத்தில் இன்று ஆரம்பமானது.

வரையறுக்கப்பட்ட கெபிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் தலைமையகத்தில் இருந்து  மட்டக்களப்பு, புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை, மற்றும் திருகோணமலை ஆகிய  மாவட்டங்களுக்கான பொருட்களை ஏற்றிய வானங்கள் இன்று காலை புறப்பட்டன.

எம்.ரீ,வி/எம்.பி.சி ஊடக வலையமைப்பு ஜோன் கீல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இம்முறை சக்தி சிரச நிவாரண யாத்திரையை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்

வரையறுக்கப்பட்ட கெபிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற சர்வமத அனுஷ்டானங்களை தொடர்ந்து நிவாரண யாத்திரை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்று முற்பகல் புத்தளம் மாவட்டத்தை சென்றடைந்த எமது குழுவினர் நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளிப்பதற்காக எமது மற்றுமொரு குழுவினர் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சக்தி சிரச ஜோன் கீல்ஸ் நிவாரண யாத்திரை மூலம் எடுத்துச் செல்லப்படுகின்ற உலர் உணவுப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

சக்தி சிரச நிவாரண யாத்திரை ஊடாக எடுத்துச் செல்லப்படுகின்ற நிவாரணப் பொருட்கள் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் கடும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

10898305_825814300812163_8394741046252418826_n 10352087_825814014145525_2301777266433118461_n 1544951_825813520812241_8104647928976993574_n

 

10888906_825813804145546_842808152711980045_n


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்