கிழக்கு கரையோரத்தில் தாழமுக்கம்; சீரற்ற காலநிலை தொடரும் என்கிறது வ. தி

கிழக்கு கரையோரத்தில் தாழமுக்கம்; சீரற்ற காலநிலை தொடரும் என்கிறது வ. தி

கிழக்கு கரையோரத்தில் தாழமுக்கம்; சீரற்ற காலநிலை தொடரும் என்கிறது வ. தி

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2014 | 3:58 pm

கிழக்கு கரையோரத்திற்கு அப்பால் நிலைகொண்டுள்ள தாழமுக்கத்தினால் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் தொடர்ந்தும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வரை உயர்வடைவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டை சூழவுள்ள கடற்பரப்பில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கடற்பிராந்தியத்தில் வடகிழக்கு திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 40 தொடக்கம் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக மட்டக்களப்பு வரையும்,   பொத்துவிலில் இருந்து காலி வரையும் உள்ள கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வரை அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது

எனவே குறித்த கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் அபாயகரமாகவும் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை முன்னறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்